Living Streams
Support Us

இன்றைய தியானத்திற்கு

இன்றைய தியானத்திற்கு

கடந்த கால அற்புதங்கள்
1 சாமுவேல் - 17:24-49
எபிரேயர் - 12:1-16
சிங்கத்தின் கைக்கும், கரடியின் கைக்கும் தப்புவித்த கர்த்தர்...
1 சாமு - 17:37

தாவீது வீர தீரமான ஒரு வாலி பன். எனவே சிங்கத்தையும், கரடி யையும் கண்டு அஞ்சாமல் அவை களை எதிர்த்து நின்று அவை களைக் கொன்று போட்டான். சிங் கத்தையும், கரடியையும் கொன்ற அந்த அனுபவம், பின்னாளில் ராட்ச தனாகிய கோலியாத்தையும் தன் னால் வீழ்த்த முடியும் என்ற நம்பிக் கையைக் கொடுத்தது. அதற்கு முக் கியமான காரணம் அவன் தன்னு டைய சொந்த பலத்தால் சிங்கத்தை யும் கரடியையும் வீழ்த்தியதாக எண் ணாமல் கர்த்தர்தான் தனக்கு பலம் தந்தார் என்று அவன் நம்பி அறிக்கை செய்தான். எனவே அதே தேவன் தனக்கு கோலியாத்தை வீழ்த்தும் பலத்தையும் தருவார் என்று நம்பினான். (1 சாமு-17:37)
அநேகர் தங்களின் கடந்தகால சில வெற்றிகளின் பின்னால் தேவ கிருபையும், ஆதரவும் இருந்தது என் பதை உணர்வதில்லை. தங்களின் சுயதிறமைகளாலும் சமாத்தியங்க ளாலுமே காரியங்களைச் சாதித்தாக அவர்கள் எண்ணுகின்றார்கள். எனவே அடுத்ததாக எதையாவதுசாதிக்க விரும்பும்போது தங்களின் பலத்தை யும், திறமையையும் சார்ந்து நிற்கின்றார்கள். எனவே பல வேளைகளில் அவர்களின் கடந்தகாலச் சாதனைகள் புதிய முயற்சிக ளுக்குக் கை கொடுக்காமல் போகிறது.
சவுல் ராஜாவும் துவக்க காலத்தில் தேவ னுடைய கிருபையினால் தன்னுடைய சக் திக்கு அப்பாற்பட்டு சில வெற்றிகளை அடைந்த அனுபவம் உடையவன்தான். ஆயி னும் அவன் அவைகளை எண்ணி நன்றியு ணர்வுடன் கர்த்தருடைய வழிகளில் நடந்தி ருந்தால் பின்னர் அவனுக்கு ஏற்பட்ட சோத னையான சூழ்நிலைகளில் அவன் தைரிய மாய் நின்று சாதனை படைத்திருக்க முடியும். ஆனால் சுய வழிக்கு முக்கியத்துவம் கொடுத் ததால் கோலியாத் எதிர்த்த போதும், பிற யுத்த நேரங்களிலும் அவன் தேவனைச் சார்ந்து வெற்றிகளைக் காண இயலவில்லை.
ஆகாப் ராஜாவிற்கு எதிராக வந்த இரண்டு யுத்தங்களில் கர்த்தர் அவனுக்குத் துணை நின்று வெற்றி பெறச்செய்தார். ஆனால் அவன் அதற்கேற்ப தேவனுக்கு நன்றியுடை யவனாயிருந்து, அவருடைய வல்லமை யைச் சார்ந்து நிற்கவில்லை. எனவே அவன் தன் சுய பலத்தை நம்பிச் சென்று இன் னொரு யுத்தத்தில் பரிதாபமாக மாண்டான். ஆம். கடந்தகால வெற்றிகள் இன்னும் பெரிய வெற்றிகளை காணச் செய்வதற்கான தூண் டுகோல்களாக இருக்க முடியும். ஆனால் தேவன் கடந்த நாட்களில் செய்த நன்மை களை எண்ணி அவரோடுள்ள உறவுகளில் பலப்பட வேண்டும். அப்போது முன்னரை விடப் பின்னர் பெரிய காரியங்கள் நடை பெறும். சிலருக்குக் கடந்த காலத்தில் கர்த்தர் செய்த நன்மைகள் நினைவிலிருக்கும். ஆயி னும் அந்த நன்றியை வெளிப்படுத்தும்படி யான ஒரு வாழ்க்கை இராது. எனவே கடந்த காலத்தில் கர்த்தர் செய்த உதவிகளை எண்ணி நிகழ்காலத்தில் பிரச்சனைகளைச் சந்திக்க சென்றால் பலன் கிடையாமல் போகும்.

சிந்தனைக்கு

உன் பலத்தைக் குறைவாகக் கணக்கிட்டுக் குறைந்து போகாதே.
உன் பலத்தை அதிகமாகக் கணக்கிட்டு அவதிப்படாதே.

 


No. 126, Muthiya Muthaliar Street, Muthialpet, Pondicherry, 605003. India
Mail: jeevaneerodai@gmail.com | Phone: +91 - 0413 - 223 6042
Copyright © 2017. Living Streams