மனிதனின் பாவ நிலைமை, மனந்திரும்புதல், இயேசுவினால் வருகின்ற இரட்சிப்பின் அனுபவம். வாழ்க்கை மாற்றம். பரிசுத்தமாகுதல், சாட்சி வாழ்க்கை, பரிசுத்தாவியின் ஐக்கியம் ஆகியவற்றிற்கு ஜீவநீரோடை ஊழியங்கள் அதிக முக்கியத்துவம் தருகிறது.
ஜீவநீரோடை ஊழியங்கள் வேத சத்தியங்களை விட்டு சற்றும் விலகிப் போகாமல், தேவனையும் அவருடைய கிருபையையும் சார;ந்து செயல்படும்படியாக தேவனால் நன்கு பயிற்றுவிக்கப்பட்டிருக்கின்றது.
பணம், பொருள், அந்தஸ்து, புகழ், ஆடம்பரம்,அதிகாரம், பதவி போன்றவைகளை நோக்கி மனம் சற்று சாய்ந்தாலும், தேவன் வகுத்த சத்தியத்தின் வழிகளை விட்டு விலக நேரிடும் என்ற விழிப்புணர;வு ஜீவநீரோடை ஊழியங்களில் முக்கியமாக எண்ணப்படுகிறது.
ஜெபம,; வேததியானம,; ஆராதனை, ஊழியம், பக்தி ஒழுங்குகள் ஆகியவைகளை மிக முக்கியமாக எண்ணி செயல்படுகின்ற அதே வேளையில், தேவ உறவு, தேவனை வாழ்க்கையில் பிரதிபலித்தல், தேவநோக்கம் நிறைவேற்றுதல், நற்குணங்களால் அடையாளங் காணப்படுதல் போன்ற அனுபவங்களை இந்த ஊழியங்கள் அதிகமாக வற்புறுத்துகின்றன.
உண்மையான ஊழியத் தேவைகளுக்காக காணிக்கை வேண்டுகோள் தருவது தவறல்ல. ஆயினும் காணிக்கை என்ற பெயரில் ஜனங்கள் மிகுதியாக ஏமாற்றப்படுகின்ற இந்த நாட்களில் காணிக்கை வேண்டுகோள் விடுப்பதைத் தவிர;ப்பது நல்லது என்று இந்த ஊழியங்கள் கருதுகின்றது.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை ஆராதிப்பதோடு நின்று விடாமல், அவருடன் இனைந்து வாழ்ந்து அவருடைய ஐக்கியம் அளிக்கின்ற ஆற்றலினால் அவருக்கு உகந்த வாழ்வை வாழ்ந்திட இந்த ஊழியங்கள் அறைகூவல் விடுகின்றது.
துறவு வாழ்க்கை, சன்னியாசம், உடை மற்றும் தோற்றங்களால் அதிக இறைப்பற்றினைக் காண்பிக்காமல், ஜனங்களின் நடுவில் இயேசுவுக்கேற்ற ஒரு வாழ்க்கையை வாழ்வதின் மு{Pலம் விசேஷ இறைப்பற்றை வெளிப் படுத்த ஜீவநீரோடை ஊழியங்கள் ஊக்குவிக்கின்றன.